AIJTLS Overview

Tamil is one of the leading languages in the world and also classical. Tamil is one of the few classical languages in existence today with a literary tradition of more than two thousand five hundred years. And because of the tradition of carefully preserving old structures, even the ancient literary style is intelligible to the people.

Tamil literature is one of the oldest and best literature in the world. Tamil literature has flourished and flourished with various characteristics in different eras. Tamil literature deals with various aspects of life. There are many forms in Tamil literature like Venba, Kural, Free verse, Essay, Proverbs, and ninety-six types of minor literatures.

This “Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS)” has been created to explore and expand broad areas of research on Tamil literature.

Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS) is a Peer-Reviewed and Open Access Tamil Journal that considers scholarly, research-based articles especially designed for all area of Tamil Literature and related area.

The Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS) is an open-access and peer-reviewed journal published by Maayan Publications.

AIJTLS was established in 2023 with the aim of facilitating the dissemination of high-quality research in the field of Tamil literature. We recognize the significance of digital advancements in academic publishing and have embraced the online medium to reach a wider audience across the globe.

The journal is led by Editor-in-Chief Dr. S. Rajaram supported by expert international editorial board members who take an objective approach to peer review, ensuring each research paper is reviewed and evaluated on its own scholarly merits and research integrity.

It publishes high-quality empirical, theoretical and interdisciplinary research, from a wide range of traditions, that contributes to the development of society across the broad field of Tamil Literature. It is being established as a brand-new, forward-looking journal in the field of Tamil Literature.

Publishing your work in the Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS) means you will receive prompt and reliable publishing and a global platform for your research to reach its full potential. The journal is published in online versions.

Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS) is an International Journal published Bi-Annual in January, July by Maayan Publications. Authors are encouraged to submit complete unpublished and original works, which are not under review in any other journals.

 

ஆழி தமிழாய்விதழ் பற்றி

தமிழ், உலகில் உள்ள முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் இதுவும் ஒன்றாகும். மேலும் கவனமாகப் பழைய அமைப்புக்களைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடை கூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலையில் உள்ளது.

தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து ஓங்கி வளர்ந்து வந்துள்ளது. வாழ்வின் பல்வேறு கூறுகளைத் தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் இலக்கியத்தில் வெண்பா, குறள், புதுக்கவிதை, கட்டுரை, பழமொழி, தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்கள் எனப் பல வடிவங்கள் உள்ளன.

மரபு வழியாக நோக்குகையில் தமிழ் மொழியில் சுமார் 96 வகையான நூல் வகைகள் உண்டு. தற்காலத்தில் மரபு இலக்கியங்களுடன் பல்வேறு புதிய இலக்கிய வகைகளும் சேர்ந்து தமிழ் இலக்கியம் அகன்று விரிந்து கொண்டே செல்கிறது.

அத்தகைய தமிழ் இலக்கியம் சார்ந்த ஆராய்ச்சியின் பரந்த பகுதிகளை ஆய்வதற்கும் அதை விரிவுபடுத்துவதற்கும் இந்த “ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ்” உருவாக்கப்பட்டுள்ளது.

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழுக்கு வருகை தரும் அனைவரையும் வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சியடைகின்றோம்.

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் தமிழ் இலக்கியம் மற்றும் அதன் தொடர்புடைய இலக்கிய துறைகளில் முன்னேற்றம் தொடர்பான அறிவைப் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் உயர் மட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஆதரிக்கும் ஒரு இலக்கிய ஊடகம்.

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் புதிய ஆராய்ச்சியாளர்களிடையே தங்கள் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது.

2023 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இவ்விதழில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் துறை அல்லாத தமிழ் ஆர்வலர்கள் போன்றோர் பலரும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு தமிழிலக்கிய வளர்ச்சிக்கும் இதழின் வளர்ச்சிக்கும் பங்காற்றுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அரையாண்டிதழாக ஜனவரி மற்றும் ஜூலை ஆகிய திங்களில் தொடர்ந்து பிரசுரமாகும். இந்த ஆய்விதழில் வெளியிடப்படுவதற்குத் தரமான இலக்கிய ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

எனவே உங்கள் தமிழிலக்கிய ஆய்வோடு பிற துறைகளையும் ஒப்பிட்டு, தொடர்புபடுத்தி எழுதும் அனைத்து ஆய்வுகளையும் ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் என்னும் ஆய்வுப் பெட்டகத்தில் சேர்ந்து வைக்க இரு கரம் குவித்து அன்புடன் அழைக்கின்றோம்.