Aim of AIJTLS

AIJTLS aims at providing a platform and encourages emerging scholars and academicians globally to share their professional and academic knowledge in the fields of Tamil Literature and other related studies.

AIJTLS aims to uphold the rights of authors, address their needs, and foster a rapid, convenient, unbiased, and comprehensive publishing environment, which not only guarantees the highest quality constructive peer-review process but also provides an evaluation system that involves the entire research community. To fulfill this mission, AIJTLS applies the most advanced latest web technologies to bring scholarly publishing to a new generation.

A broad scope of the publication is available in the Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS). It includes, but is not limited to, the subject areas: Sangam Literature, Ethical Literature, Devotional Literature Epic Literature, Minor Literature and There are many forms in Tamil literature like Venba, Kural, Free verse, Essay, Proverbs.

Articles are accepted to understand that the work presented is original and has not been published elsewhere and that the authors are requested to sign a copyright form before publication.

Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS) ensures that published articles of the Journal will be readily available, open access and widely accessible anywhere at any time.

எங்கள் இதழின் நோக்கம்

தமிழ் இலக்கியம் உலகின் மிகத் தொன்மையான இலக்கியமாகும். தமிழ் இலக்கியம் தமிழரின் உன்னதமான கலாச்சாரத்தின் ஒரு மிகப்பெரும் சான்று ஆகும்.

தமிழ் இலக்கியம் உலகின் தொன்மையான மற்றும் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு தொடர்ச்சியான வரலாற்றினைக் கொண்டது. பல்வேறு காலங்களில் தமிழ் இலக்கியம் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டு தழைத்து ஓங்கி வளர்ந்து வந்துள்ளது.

மரபு வழியாக நோக்குகையில் தமிழ் மொழியில் சுமார் 96 வகையான நூல் வகைகள் உண்டு. தற்காலத்தில் மரபு இலக்கியங்களுடன் பல்வேறு புதிய இலக்கிய வகைகளும் சேர்ந்து தமிழ் இலக்கியம் அகன்று விரிந்து கொண்டே செல்கிறது.

பண்டைக் காலத்தில் இந்தத் தமிழ் மண்ணில் வாழ்ந்த தமிழ் புலவர்கள் காலத்தால் அழியாத மிகச் சிறந்த நூல்கள் பலவற்றை நமக்கென விட்டுச் சென்றுள்ளனர். தமிழில் நாம் இன்று காணும் இலக்கியங்களிலேயே மிகத் தொன்மையானவை சங்க இலக்கியங்களே ஆகும்.

ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் என்பது உலகளாவிய சமூகத்திற்கு தமிழ் துறைகளில் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களுக்கான தளத்தை வழங்குவதாகும். இவை தமிழ் துறைகளின் அசல் ஆராய்ச்சியின் வெளியீடுகளைக் கொண்டுள்ளது.

21-ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு வெளியீட்டு தளத்தை ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆய்வாளர்களுக்கும் வழங்குவதோடு, ஒட்டுமொத்த வெளியீட்டு அனுபவத்தை மேம்படுத்துவதோடு, வெளியீட்டு செலவுகளை குறைப்பதே எங்கள் நோக்கம்.

எனவே தக்க ஆதாரங்களால் தமிழ் இலக்கியத்தின் உண்மை நிலை, பெருமை, சிறப்பு ஆகியவற்றை எங்கள் இதழின் மூலம் உலகத்தில் உள்ள அனைவரின் கரங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் இதழின் நோக்கம். அதற்காகவே இந்த ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழைத் துவங்கியுள்ளோம்.