நடப்பு பதிப்பு | Current Issue
தொகுதி 2 பதிப்பு 1 (ஜனவரி 2024)
Volume 2 Issue 1 (January 2024)
“ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ்” ஜனவரி மற்றும் ஜூலைத் திங்களில் ஆண்டிற்கு இருமுறை (ஆறு மாதத்திற்கு ஒருமுறை) வெளிவருவது மகிழ்ச்சிக்குரியது. ஆழி என்னும் பெயரில் வெளிவரும் இவ்விதழ் தன் பெயரிலேயே அதன் நோக்கத்தையும் உள்ளடக்கியிருப்பது தனிச் சிறப்பு. ஆழி என்பதற்கு கடல், சக்கரம், தேருருளை, மோதிரம், யானைக்கை, நுனி, வட்டம், வண்டி எனப் பல்வேறு பொருள்களை அகராதிகள் உணர்த்தினாலும் கடல் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். கடலின் ஆழம் யாராலும் கணித்தறிய இயலாதது. அதுபோல தமிழின் ஆழமும் யாராலும் கண்டறிய இயலாது. அவ்வகையில் தமிழின் ஆழத்தைக் கண்டறிவதற்கு ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் ஒரு கருவியாக வெளிவருகிறது.
தமிழ் இலக்கண, இலக்கியங்களை ஆழ்ந்து கற்று, அதன் நுட்பங்களையும் சிறப்புகளையும் தனித்தன்மைகளையும் உலகிற்கு உணர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். உலக மொழிகளில், தமிழ், செம்மொழித் தகுதி பெற்றிருப்பதோடு மட்டுமல்லாமல் இன்றும் உலகின் பெருவாரியான நாடுகளில் வாழும் தமிழர்களால் பேசப்படும் மொழியாகவும் விளங்குகிறது. தொன்மையும் தொடர்ச்சியும் கொண்ட தமிழ் மொழி உலக மக்களால் போற்றப்படும் மொழியாகவும் விளங்குகிறது. உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்தவர்கள் தமிழைக் கற்பதற்கும் அதன் இலக்கண இலக்கியங்களை அறிந்து கொள்வதற்கும் ஆர்வமாக உள்ளனர். இந்நிலையில் தமிழ் இலக்கண, இலக்கியங்களின் சிறப்புகளை ஆராய்ந்து உலகிற்கு உணர்த்த வேண்டியது தமிழர்களின் கடமையாகும்.
உயர்கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் ஆராய்ச்சி மாணவர்களும் பேராசிரியர்களும் தமிழறிஞர்களும் தமிழ் ஆர்வலர்களும் தமிழ் இலக்கண, இலக்கியங்கள் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, அதன் பல்வேறு கருத்துகளையும் சிறப்புகளையும் ஆராய்ச்சி முடிவுகளாக ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழில் வெளியிட முன்வருவதன் மூலம் நாம் அனைவரும் தமிழுக்கு வளம் சேர்ப்பர்கள் ஆவோம். அனைவருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்.
முனைவர். சு. இராசாராம்
முதன்மை ஆசிரியர்
நடப்பு பதிப்பு | Current Issue
தொகுதி 2 பதிப்பு 1 (ஜனவரி 2024)
Volume 2 Issue 1 (January 2024)
இதழின் முக்கிய விவரங்கள்
வெளியீட்டு வகை: மின் அச்சு
இதழின் பிரிவு: சங்க இலக்கியம், நீதி இலக்கியம், பக்தி இலக்கியம், காப்பிய இலக்கியம், சிற்றிலக்கியம்
வெளியீடு: அரையாண்டு இதழ் (ஜனவரி, ஜூலை)
மொழி: தமிழ்
கட்டுரை செயலாக்க கட்டணம் (APC): இலவசம்
வெளியீட்டாளர்: மாயன் பதிப்பகம்
வெளியீட்டு வழிகாட்டுதல்கள்: COPE வழிகாட்டுதல்களைப் பின்பற்றி
திறந்த அணுகல்: வாசகர்களுக்கு இலவச அணுகல்
மதிப்பாய்வு செயல்முறை: இரட்டை குருட்டு சக மதிப்பாய்வு
வெளியீடு காலம் (சமர்ப்பிப்பு முதல்): திருத்த சுழற்சிகளின் அடிப்படையில் குறைந்தபட்சம் 60 நாட்கள்.
மின்னஞ்சல்: editor@aijtls.com
For More Details: Click Here
எங்களுடன் இணைய...
ஒரு ஆய்விதழின் ஆசிரியர் குழுவில் உறுப்பினராக (அ) மதிப்பாய்வாளராக இருப்பது உண்மையிலேயே பயனுள்ளது, இனிமையானது மற்றும் மதிப்புமிக்கது. இது தொடர்புடைய துறைகளில் நிபுணர்களால் வழங்கப்படும் வழிகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மூலம் ஆராய்ச்சி உலகில் தங்களை இணைக்க உதவுகிறது.
© 2023, ஆழி சர்வதேச தமிழிலக்கிய ஆய்விதழ் - Aazhi International Journal of Tamil Literature Studies (AIJTLS). Published by Maayan Publications.